இந்தியா, மகாராஷ்ராவில் ரயில் விபத்து: 13 பேர் பலி

புதுடெல்லி, ஜன.23- 

இந்தியா, மகாராஷ்ராவில் ரயிலொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தின் போது அந்த ரயில் லக்னோவில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்தது. 

அந்த ரயிலில் தீ பரவியிருப்பதாக செய்தி பரவியதை அடுத்து பலர் அதில் இருந்து வெளியே குதித்தனர். அதன் பிறகு அந்த ரயில் மற்றொரு தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயிலை மோதியதாகக் கூறப்படுகிறது.அதில் பலர் காயமுற்றனர்.  

மரண எண்ணிக்கை உயரலாம் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுட்டுள்ளன. ரயிலில் சிறிய அளவிலான தீப்பொறி உண்டானது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

WATCH OUR LATEST NEWS