கோலாலம்பூர், ஜன.23-
மலேசியாவில் சூரிய சக்தி திட்டம் சம்பந்தப்பட்ட 20 மில்லியன் அமெரிக்க டாலரை அல்லது 9 கோடி ரிங்கிட்டை மீண்டும் 1எம்டிபி நிதியில் சேர்ப்பதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப்பிரிவான FBI மற்றும் அமெரிக்க நீதித்துறை வெற்றிக் கண்டுள்ளது.
DuSable Capital management LCC என்ற முதலீட்டு நிறுவனத்தின் வர்த்தக சகாவும், வர்த்தகருமான Frank White Jr- ( பிரான்க் வைட் ஜுனியர் ) மிருந்து அந்தப் பணம் பெறப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முறைகேடு புரியப்பட்ட 1எம்டிபி நிதி தொடர்புடைய பணத்திலிருந்து அந்த பெரும் தொகை பெறப்பட்டுள்ளது என்பதை அறிந்து வர்த்தகர் Frank White Jr- மனமுவந்து, அந்த நிதியை திருப்பி ஒப்படைத்துள்ளதாக அது தனது அறிக்கையில் மேலும் விவரித்துள்ளது.