நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாப்பதில்/கடந்த மூன்று அரசுகள் சாதனை/வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் கூறுகின்றனர்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், நாட்டின் நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்பதில் குறைந்த வெற்றியைப் பெற்று இருப்பதாக மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் ஒன்பது முன்னாள் தலைவர்கள் கூறுகின்றனர்.

முந்தைய மூன்று அரசாங்கங்களின் நிர்வாகங்களுடன் ஒப்பிடுகையில் நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்பதில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற அணுகுமுறையை தங்களால் மதிப்பீடு செய்ய முடிவதாக மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் அந்த ஒன்பது முன்னாள் தலைவர்களும் கூட்டாக கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காலமாக வெளிபுற சக்திகளால் நீதித்துறைக்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன என்று அம்பிகா ஶ்ரீநிவாசன், ரகுநாத் கேசவன், சைநூர் சகாரியா, மா வெங் குவாய், ஸ்டீவன் திரு, கிரிஸ்டோபர் லியோங், குதுபுல் சாமான் புஹாரி உட்பட ஒன்பது தலைவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

தற்போதைய அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் முந்தைய மூன்று அரசாங்கங்ளும் நீதித்துறை சுதந்திரத்தை மதித்து வந்ததாக பரவலாக உணரப்படுகிறது. ஆனால், தற்போதையை நிலை பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர்களான துன் மகாதீர் முகமட், டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மற்றும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோர் தலைமையிலான மூன்று அரசாங்கங்களை அந்த ஒன்பது முன்னாள் தலைவர்களும்
மேற்கோள்காட்டினர்.

ஜேசிஏ எனப்படும் 2009 ஆம் ஆண்டு நீதிபதிகள் நியமன சட்டத்தின் கீழ் நீதிபதிகள் நியமன விவகாரத்தில் தலையீடு இருப்பது போல் அண்மையில் நாட்டின் தலைமை நீதிபதி துன் மைமுன் துவான் ஆஆஏஆண் தமது உரையில் சுட்டிக்காட்டியிருப்பதையும் அவர்கள் தங்கள் வாதத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை பிரதமர் டத்தோஸ்ரீ டத்தோஸ்ரீ அன்வார், முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது நினைவூட்டியதை தலைமை நீதிபதி தமது உரையில் மேற்கோள்காட்டியிருந்தையும் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் அந்த ஒன்பது முன்னாள் தலைவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS