ரானாவ், ஜன.24-
லோரி ஒன்று சாலையை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் விழுந்ததில் சிமெண்ட் தூண்களின் குவியல்கள் அடியில் சிக்கிய அதன் ஓட்டுநரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் சுமார் 30 மணி நேரம் கடுமையாக போராடினர்.
கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படும் இந்த விபத்து தொடர்பில் ஓர் அவரச அழைப்பை ரானாவ் தீயணைப்பு, மீட்புப்படையினர் பெற்றனர்.
இந்நிலையில் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர்,
30 வயது மதிக்கத்தக்க அந்த லோரி ஓட்டுநரின் உடலை 30 மணி நேரத்திற்குப் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் மீட்டனர்.
கிரேன்களின் உதவியுடன் இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகள் தோல்வி கண்டதைத் தொடர்ந்து மூன்றாவது முயற்சியில் இரும்புத்தூண்களை ஏற்றி வந்த அந்த லோரியின் இடிப்பாடுகளிலிருந்து ஓட்டுநரின் உடல் மீட்கப்பட்டதாக ரானாவ் தீயணைப்பு மீட்புப்படை நிலையத்தின் தலைவர் ரிட்வாம் முகமட் தையிப் தெரிவித்தார்.