குவாந்தான், ஜன.24-
கிழக்குக்கரை நெடுஞ்சாலையான லெபுராயா பந்தாய் திமோரில் 164.7 ஆவது கிலோமீட்டரில் டிரெய்லர் லோரியும், எம்பிவி வாகனமும் சம்பந்தப்பட்ட விபத்தில் சிறுவன் ஒருவன் மரணமுற்ற வேளையில் நால்வர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் நிகழ்ந்தது.
டிரெய்லர் லோரியுடன் மோதிய எம்பிவி தொயொத்தா அல்பார்ட் வாகனத்தில் அறுவர் பயணம் செய்தனர். இதில் நால்வர் கடும் காயங்களுக்கு ஆளாகிய வேளையில் வாகனத்தின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே மரணமுற்றதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
காயமுற்ற அனைவரும் குவந்தான் சுல்தான் ஹஜி அஹமட் ஷா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.