ஜோகூர்பாரு, ஜன.24-
கடந்த வாரம் ஜோகூர்பாரு, ஜாலன் சுங்கை டாஞா- ஜாலான் நுசா பெஸ்தாரி சாலையில் சமிக்ஞை விளக்கு ஒன்றை மோதி, காரோட்டி ஒருவருக்கு கைமுறியும் அளவிற்கு மிக அபாயகரமாக வாகனத்தைச் செலுத்திய BMW கார் ஓட்டுநருக்கு ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஐந்தாயிரத்து 500 ரிங்கிட் அபராதம் விதித்தது.
சமிக்ஞை விளக்கை மோதிய அடுத்த கணமே அங்கிருந்து தப்பிச் சென்று விட்ட 27 வயது கிரிஸ்டொபர் லிம் கா எங் – என்ற அந்த BMW கார் ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இறுதியில் பிடிபட்டார்.
கடந்த ஜனவரி 17 ஆம் தேதி அதிகாலை 3.10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த கார் ஓட்டுநர் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.