பேரா, சுங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் இணைப்பாட நனிசிறப்பு விழா

சுங்காய், ஜன.24- 

பேரா, சுங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் இணைப்பாட நனிசிறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. வகுப்பறைப் பாடங்களைத் தாண்டி, இணைப்பாடங்களில் சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்த மாணவச் செல்வங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த விழா நடைபெற்றது.  
 

இந்த விழாவில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியக் குழுவின் பொதுச் செயலாளர் சுதன் மூக்கையா கலந்து கொண்டு சிறப்பித்தார்.   

மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தில் காட்டிய கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய அவர், ஆசிரியர்களும் பெற்றோர்களும் தந்த வற்றாத ஆதரவு இல்லாமல் மாணவர்களின் இந்த முன்னேற்றம் சாத்தியமில்லை என்று சுதன் குறிப்பிட்டார். 

கல்வி என்பது முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்றும், தமிழ்ப் பள்ளிகளை ஆதரிப்பதன் மூலமே நமது பண்பாடு பாதுகாக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசுவதைப் பாராட்டிய அவர், குழந்தைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து, பெரிய கனவுகளை காண ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

சுங்காய் தோட்த் தமிழ்ப்பள்ளி அந்நகரின் முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் தற்சமயம் 14 மாணவர்கள் பயில்கிறார்கள். எதிர்வரும் 2025 / 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கானப் பதிவை மேற்கொண்டு வருகிறார்கள்.  
 

தரமான கற்றல் கற்பித்தலுக்காக இப்பள்ளியில் 9 ஆசிரியர்கள் பணி புரிந்து கல்விச் சேவையாற்றி வருகிறார்கள். என சுற்று வட்டார மக்கள் தங்கள் பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு சுங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சுதன் கேட்டுக் கொண்டார். 

WATCH OUR LATEST NEWS