சிங்கப்பூர், ஜன.24-
சிங்கப்பூரில் தமது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய முதியவருக்கு 19 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 68 வயதான அந்த முதியவர் ஐந்தாண்டுகளுக்கு முன் தமது குடும்பத்தினர் வெளிநாடு சென்றிருந்த போது அக்குற்றத்தைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அவ்வாறு செய்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
அம்முதியவர் சம்பந்தப்பட்ட அந்த 35 வயது பணிப் பெண்ணுக்கு மதுபானம் கொடுத்தும் பல ஊசிகளைச் செலுத்தியும் அச்செயலைப் புரிந்தது தெரிய வந்துள்ளது. இதற்கு முன் அவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்ட போதும் அவர் அவற்றை மறுத்திருந்தார். இறுதியில் அவர் அக்குற்றங்களை ஒப்புக் கொண்டார். அதனை அடுத்து அம்முதியவருக்கு 19 ஆண்டுகள் மற்றும் 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.