கிள்ளான், ஜன.24-
கிள்ளான், புலாவ் இண்டாவில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா நச்சு வாயு கசிவினால் நான்கு தொழிலாளர்கள் தீக்காயங்களுக்கு ஆளாகினர். மேலும் மூவர் மூச்சுத்திணறலுக்கு இலக்காகினர்.
இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் நிகழ்ந்தாக தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்து அத்தொழிற்சாலைக்கு தீயணைப்பு, மீட்புப்படையினர், விரைந்ததாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
காயமுற்றவர்கள் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளர். அமோனியா கசிவுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.