நீலாய், ஜன.24-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் எதிர்காற்று பலமாக வீசுவதால் வாகனமோட்டிகள் சற்று கவனமாக வாகனத்தை செலுத்துமாறு தீயணைப்பு, மீட்புப்படை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த எதிர்காற்றில் இரண்டு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது. நெகிரி செம்பிலான் வழித்தடத்தில் எதிர்காற்று பலமாக வீசுகிறது.
இந்த எதிர்காற்று விபத்துக்கு வித்திடக்கூடிய ஆபத்து நிறைந்நது என்பதால் வாகனமோட்டிகள் மிக விழிப்பாக நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு தீயணைப்பு, மீட்புப்படை யின் பாதுகாப்பு பிரிவு உதவி இயக்குநர் முகமட் பாயிஸ் முயின் முகமட் கேட்டுக்கொண்டுள்ளார்.