ஹோட்டல் நிர்வாகிக்கு 12 மாதச் சிறை

கோலலம்பூர், ஜன.24-

கடந்த ஆண்டு ஹோட்டல் ஒன்றுக்கு சொந்தமான 30 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை நம்பிக்கை மோசடி செய்த குற்றத்திற்காக ஹோட்டல் நிர்வாகி ஒருவக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 12 மாத சிறை மற்றும் இரண்டு பிரம்படித் தண்டனை விதித்தது.

36 வயது எஸ். சஞ்சீவ் குமார் என்று அந்த ஹோட்டல் நிர்வாகி, கைது செய்யப்பட்ட தினமான ஜனவரி 20 ஆம் தேதி முதல் சிறைத் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி ஹமீடா முகமட் டெரில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

ஹோட்டல் அறைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட 31 ஆயிரத்து 791 ரிங்கிட் 73 காசு நிர்வாகத்தின் வங்கி கணக்கில் சேர்க்காமல் அப்பணத்தை சுயத்தேவைக்கு பயன்படுத்திக்கொண்டது மூலம் நம்பிக்கை மோசடி செய்ததாக சஞ்சீவ் குமார் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

சஞ்சீவ் குமார் கடந்த ஆண்டு ஜனவரிக்கும் பிப்வரிக்கும் இடைப்பட்ட காலத்தில் கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றசாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டா் 14 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கும் குற்றவியல் சட்டம் 408 பிரிவின் கீழ் சஞ்சீவ் குமார் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS