சிரம்பான், ஜன.24-
தங்ளுக்கு வழங்கப்பட்ட நம்பகமிகுந்த பணித்தன்மைக்கு ஏற்ப நீதிபதிகள் எப்போதுமே கண்ணியத்துடன் செயலாற்ற என்று நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட் கேட்டுக் கொண்டார்.
தாங்கள் வகித்து வரும் பதவிக்கு ஏற்ப நேர்மையையும், நம்பகத்தன்மையையும் பாதுகாக்கும் அதேவேளையில் உயர்தரத்தின் அடிப்படையில் கடமையாற்றிட வேண்டும் என்று தெங்கு மைமூன் வலியுறுத்தினார்.
2009 ஆம் ஆண்டு நீதிபதிகளுக்கான நெறிமுறைக்கோட்பாட்டு சாசனத்தில் மிகத்தெளிவாக கூறப்பட்டு இருப்பதைப் போல வழக்குகளில் பாரபட்சமின்றி நியாயமாகவும், பொறுப்பாகவும் நீதிபதிகள் கடமையாற்றிட வேண்டும் என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
இன்று சிரம்பானில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் வழக்கறிஞர் மன்றத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் துன் மைமூன் மேற்கண்டவாறு கூறினார்.