ஜோகூர்பாரு, ஜன.24-
ஜோகூர்பாரு, பண்டார் பாரு உடாவில் பள்ளிக்கு அருகில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த BMW காருக்குள் தாயும் மகளும் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை 9 மணியளவில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு போலீசார் விரைந்ததாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.
42 தாயும், 14 வயது மகளும் சுயநினைவு கிடந்த நிலையில் அவர்களை சோதனை செய்த மருத்துவ அதிகாரிகள், இறந்து விட்டதை உறுதி செய்தனர் என்று பல்வீல் சிங் குறிப்பிட்டார்.
சவப்பரிசோதனைக்காக அவ்விருவரின் உடல்களும் ஜோகூர்பாரு சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அந்த BMW காரின் எண்ணெய் டாங்கியின் ஏற்பட்ட பெட்ரோல் கசிவின் காரணமாக குளிர்சாதனப்பெட்டியில் கலந்து நச்சுவாயுவை வெளியேற்றியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.