அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட Yee Sang உணவு விருந்து

பெட்டாலிங் ஜெயா, ஜன.24-

வரும் ஜனவரி 29 ஆம் தேதி சீனப்புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கிறது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பே சீனப்புத்தாண்டு கொண்டாடப்படவிருப்பதால் இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் சக அமைச்சரவை உறுப்பினர்கள், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து yee sang உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.

சீனப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் பாரம்பரியமிக்க இந்த yee sang உணவு விருந்தை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ஏற்பாடு செய்திருந்தார்.

பிரதமருடன் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங், மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், விவசாயத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் உற்சாகத்துடன் yee sang உணவை பகிர்ந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS