மோரிப் கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ஒருவர் பலி, நால்வர் காயம்

ஷா ஆலாம், ஜன.24-

கோலலங்காட், மோரிப் கடற்கரையில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியான வேளையில் இதர நால்வர் காயமுற்றனர்.

இதனை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் உறுதிபடுத்தினார்.

ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் இதர நால்வர் கடும் காயங்களுடன் கிள்ளான் மற்றும் செர்டாங் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் சம்பந்தப்பட்டுள்ளனர். அனைவரும் அந்நிய நாட்டுப்பிரஜைகள் ஆவர். இது குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக டத்தோ ஹுசேன் ஒமார் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS