டெங்கில், ஜன.24-
லஞ்ச ஊழலை வேரறுக்கும் நோக்கில் நாளை சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் பேரணி நடத்தப்படுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழலை வேரறுப்பதற்கான இது போன்ற உணர்வு வெறும் பேரணியுடன் நின்று விடாமல் எல்லா நிலைகளிலும் அதற்கு எதிரான பேராட்டமும், பங்களிப்பும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
நாளை நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு உ ள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் அனுமதி வழங்கிவிட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
அதே வேளை 2012 ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் விதிமுறைகள் அனுசரிக்கப்பட வேண்டும் என்று பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு உள்துறை அமைச்சர் சைபுடின் நினைவுறுத்தியுள்ளார்.