கோலாலம்பூர், ஜன.25-
சுகாதார பராமரிப்பு பணியாளர்களுக்கான வெவ்வேறு நேர வேலைமுறை மீதான உத்தேசத் திட்டத்தை அமைச்சரவை ரத்து செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமட் அறிவித்துள்ளார்.
நேற்று காலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உத்தேசத் திட்டத்தை ரத்து செய்வதற்கு முடிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வெவ்வேறு நேர வேலை முறை தொடர்பில் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதங்கத்தையும், அதிருப்தியையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த உத்தேசத் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக அது குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளும்படி சுகாதார அமைச்சுக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.