கூலிம், ஜன.25-
கூலிம் மாவட்டத்தில் இருக்கும் குடிநுழைவுத்துறை அலுவலகத்தை மேம்படுத்துவத்தற்கான திட்டங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார் .
கூலிம் குடிநுழைவுத்துறை அலுவலகத்தில் மக்கள் சேவைகளைப் பெறுவதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் அங்கு இட நெரிசல் ஏற்பட்ட வண்ணம் இருப்பதாக அவர் கூறினார்.
இந்நிலையை மாற்றியப்பதற்கு உள்துறை அமைச்சு / குடிநுழைவுத்துறைத் தலைமைத்துவத்திடம் சில ஆலோசனைகளை பெற்று வருவதாக டத்தோ ஸ்ரீ சைஃபுடின் குறிப்பிட்டார்.
கூலிம் மாவட்டம் மட்டுமின்றி சுங்கைப்பட்டாணி மற்றும் இன்னும் சில மாநிலங்களிலுள்ள குடிநுழைவுத்துறை அலுவலங்களும் இட நெரிசலை எதிர்நோக்கி வருவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்று பாடாங் செராய் தொகுதியிலுள்ள Sungai Karangan தேசிய ஆரம்பப்பள்ளியில் உள்துறை அமைச்சின் ” SUA MESRA” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சைபுடின் மேற்கண்டவாறு கூறினார்.