கிள்ளான், ஜன.25-
கடந்த வெள்ளிக்கிழமை கிள்ளான், தாமான் செந்தோசா, ஜாலான் ஷாபுதீன் பகுதியில் சாலை நடுவே பட்டாசுகளை கொளுத்தி அராஜக செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் இரவு 8 மணியளவில் 26 வயது பெண்ணிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து போலீசார் இரு நபர்களை கைது செய்துள்ளதாக தென்கிள்ளான் மாவட்ட போலீஸ் த லைவர் ஏசிபி. சா ஹூங் போங் தெரிவித்தார்.
பிற்பகல் 2 மணியளவில் நடந்த இச்சம்பவத்தினால் தமது காரின் வலப்புறம் சேதமுற்றதாக அந்தப் பெண் தனது போலீஸ் புகார் குறிப்பிட்டுள்ளதாக அந்த உயர் போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.