காஜாங், ஜன.25-
விளையாட்டு சங்கங்கள் குறிப்பாக தேர்தல் நடத்தப்படும் முறையில் அரசியல் அமலாக்கங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ வலியுறுத்தியுள்ளார்.
விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்ற பொதுப் பேரவையும், அதையொட்டி நடைபெறும் தேர்தலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் தன்மையிலான அம்சங்கள் இருக்கக்கூடாது என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இன்று காஜாங்கில் ஆஸ்ட்ரோ ஏற்பாட்டில் நடைபெற்ற கூடைப்பந்து சூப்பர் லீக் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஹன்னா இயோ இதனை தெரிவித்தார்.