தந்தையும் மகளும் உயிரிழந்தனர்

குவா மூசாங், ஜன.25-

கோலா கிராய்-குவா மூசாங் சாலையில் இன்று அதிகாலை 10 டன் எடையுள்ள லாரி மற்றும் பெரோடுவா Alza ரக கார் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கிளாந்தான் செய்தித் தொடர்பு முறையான மெர்ஸ் சிஸ்டம் மூலம் அதிகாலை 4:06 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், கோலாகிராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஏழு உறுப்பினர்களை நிலையத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் அது கூறியது.

அதிகாலை 4:51 மணிக்கு தீயணைப்புத் துறை அங்கு சென்றபோது, விபத்தில் ஒரு பெரோடுவா Alza கார் கொளுந்து விட்டு எரிந்துகொண்டு இருந்தது.

ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கியிருந்த நிலையில் ஒரு பெண் வாகனத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார்.

தீயணைப்பு வீரர்கள், காரில் சிக்கிய ஓர் ஆடவரை வாகனத்திலிருந்து வெளியேற்ற சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தினர். இருப்பினும் பாதிக்கப்பட்டவர் காலை 5 மணியளவில் இறந்துவிட்டதாக மருத்துவ பணியாளர்களால் அறிவிக்கப் பட்டது.

இறந்தவர்கள் தந்தையும் மகளும் என்று அடையாளம் கூறப்பட்டது.

WATCH OUR LATEST NEWS