ஜோகூர், ஜன.25-
சிங்கப்பூர் வாகனங்கள், ஜோகூர்பாருவில் உள்ள எண்ணெய் நிலையங்களில் பெட்ரோல் ரோன் 95 ரக எண்ணெயை நிரப்புவதாக வெளிவந்துள்ள புகார்கள் தொடர்பில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி தொடர்பில் இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஜோகூர் மாநில இயக்குநர் Lilis Saslinda Pormomo தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் வாகனங்கள் எண்ணெய் நிரப்பப்படுவதற்கு அனுமதியளிக்கும் எண்ணெய் நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.