கஹேராவில் எட்டு மலேசிய மாணவர்கள் காயம்

கோலாலம்பூர், ஜன.26-

கஹேராவில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழகத்தில் பயிலும் எட்டு மலேசிய மாணவர்கள் போர்ட் சைட்டுக்குச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தனர். Muhammad Zafri Abdul Rasyid, Muhammad Sulhi Nazri , Muhammad Rais Zafran Muhammad Shuhaimi ஆகிய மூன்று மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கஹேராவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மற்ற ஐந்து மாணவர்களான Muhammad Firdaus Yacob, Muhammad Adli Fitri Mohd Anuar, Shahrul Aiman Jaafar, Muhammad Zulfiqar Ahmad Tarmizi, Muhammad Hazieq Badrisyah Norhamedon ஆகியோருக்கு லேசான காயங்களுடன் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றதாக Education Malaysia Egypt தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

EME அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவர்களின் நிலையை விசாரித்தனர். அல்-அசார் பல்கலைக்கழகமும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. மாணவர்கள் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று EME அறிவுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS