பெட்டாலிங் ஜெயா, ஜன.26-
பெரிகாத்தான் நேஷனல் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அகமட் சம்சூரி மொக்தார் விலகியதை அடுத்து, அந்தப் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து பாஸ் கட்சி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சியின் தலைவர் ஹடி அவாங்தான் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பார் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அமார் அப்துல்லா தெரிவித்துள்ளார். புதிய பொதுச் செயலாளர் சிறப்பாக செயல்படுவார் என்று கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தனது பதவி விலகல் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கமுடையது என்றும், கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என்றும் சம்சூரி கூறியுள்ளார். வரவிருக்கும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கூட்டணி வலுப்பெற வேண்டும் என்பதே அவரது நோக்கம் எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது