ஈப்போ, ஜன.26-
ஈப்போ நகரில் உள்ள ஈப்போ பெரிய சந்தையை நவீனமயமாக்கவும் மேம்படுத்தவும் அரசாங்கம் 15 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளதாக வீட்டுவசதி, ஊரட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார். இந்தச் சந்தை 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது. இதன் மூலம் சந்தையின் பழைய தோற்றத்தை மாற்றி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாற்ற, அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஈப்போ மாநகராட்சி இந்த திட்டத்திற்கான வடிவமைப்பு போட்டியை நடத்தி வருகிறது. இந்த பணிகள் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று, பேரா மாநிலத்தில் உள்ள மற்றொரு பாரம்பரிய சந்தையான பசார் பசீர் பிஞ்சியை மேம்படுத்த 16 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய வணிக இடங்கள், கார் – மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடங்கள் ஆகிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த பணிகள் நவம்பர் 2026 இல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஙா கோர் மிங் தெரிவித்தார். முன்னதாக, Canning சந்தை மேம்பாட்டு பணிகள் 5 இலட்ச ரிங்கிட் செலவில் முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.