மலாய்-முஸ்லீம் மக்கள் வாழும் பகுதிகளில் மது விற்பனை, தற்போதைய நிலையே தொடர வேண்டும்

ஈப்போ, ஜன.26-

பெரும்பான்மையாக மலாய்-முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் மது விற்பனை தொடர்பான தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இது சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் அரசியல் சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்கும் எடுக்கப்பட்ட முடிவு என்று வீட்டுவசதி, ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்ச ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார். மது அருந்த விரும்பாதவர்கள் வாங்க வேண்டாம் என்றும், அருந்துபவர்களைத் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

ஈப்போவில் சில பகுதிகளில் மது விற்பனைத் தடையை நீட்டிக்கக் கோரி உள்ளூர் மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இது குறித்து பரிசீலனை செய்து அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார். தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்து நாட்டின் முன்னேற்றத்தில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS