கோலாலம்பூர், ஜன.26-
இந்தோனேசிய அதிபர் Prabowo Subianto நாளை மலேசியாவுக்கு வருகை புரியவிருக்கிறார். மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று அவர் இங்கு வருவதாக விஸ்மா புத்ரா கூறியுள்ளது. இந்தோனேசிய அதிபரின் வருகை அந்நாட்டுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வலுவான அதே சமயம் சிறப்புமிக்க நட்புறவைக் காட்டுவதாக அது குறிப்பிட்டது.
சுல்தான் இம்ராஹிம் மாமன்னராக அரியணை அமர்ந்த பிறகு, ஓர் அந்நிய நாட்டுத் தலைவராக Prabowo மலேசியா வருவது இதுவே முதல் முறை. அதே வேளை கடந்தாண்டு அக்டோபரில் இந்தோனேசிய அதிபராகப் பொறுப்பேற்ற Prabowoவுக்கு ஊளாஸேஏ முதலாவது தென்கிழக்காசிய நாட்டுப் பயணமாகும்.
மிக நெருங்கிய அண்டை நாடு என்ற வகையில் ஒட்டுமொத்தத்தில் இவ்வாட்டாரத்தில் கூட்டு சுபீட்சம் மற்றும் வளர்ச்சிக்காக இரு வழி உறவை மேலும் உயரிய நிலைக்குக் கொண்டுச் செல்ல இரு நாடுகளும் கடப்பாடு கொண்டுள்ளதை அப்பயணம் காட்டுகிறது என விஸ்மா புத்ரா மேலும் கூறியது.