கிள்ளான், ஜன.26-
மருத்துவ அதிகாரிகளுக்கான Waktu Berkerja Berlainan எனப்படும் மாறுபட்ட வேலை நேர முன்னோடித் திட்டம் இரத்து செய்யப்பட்டது அரசாங்கத்தின் தவறான முடிவு அல்ல என்று சுகாதார அமைச்சர் சு டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டம், கடிதம் கசிந்ததால் இரத்து செய்யப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களை கலந்தாலோசிக்காமல் திட்டம் வெளியிடப்பட்டதால் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
புதிய திட்டத்தை உருவாக்குவதற்காக மருத்துவ ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுடன் கலந்துரையாடிய பிறகே புதிய திட்டம் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மலேசிய மருத்துவ சங்கம் அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.