கோலாலம்பூர், ஜன.26-
நிதி ஆலோசனை நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் உட்பட கடன் பெற விரும்பும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து மோசடியில் ஈடுபடுவது ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்கள் வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து சுமார் 700 மில்லியன் ரிங்கிட் வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் பெற்ற கடனில் ஒரு பகுதியை இந்த நிறுவனங்களுக்கு கட்டணமாக செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
இந்த மோசடி தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த கும்பல் சுமார் 22 மில்லியன் ரிங்கிட் வரை பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.