கோத்தா பாரு, ஜன.26-
சாலைப் போக்குவரத்துத் துறை JPJ தனது அதிகாரிகளுக்கு உடல் கேமராக்களை வழங்கும் திட்டத்தில் உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடும் கொள்முதல் பணிகளும் நடைபெற்றுவருகின்றதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பட்லி ரம்லி தெரிவித்தார். இவ்வாண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் குத்தகைக்கு விண்ணப்பிக்க திறக்கப்பட உள்ளது. இந்த கேமராக்கள் நடைமுறைக்கு வந்த பிறகு, அதற்கான நிலையான இயக்க நடைமுறை வெளியிடப்படும் என்றார்.
முன்னதாக, இந்த கேமராக்கள் அமலாக்கத்தின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். குறிப்பாக கனரக வாகனங்களை கண்காணிப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.