அரசு அலுவலகங்களில் முகப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள் மக்களிடம் நட்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்

புத்ரா ஜெயா, ஜன.26-

அரசு அலுவலகங்களில் பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் கவுண்டர் எனப்படும் முகப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள் நட்புணர்வு, கவர்ச்சிகரமான ஆளுமை, நேர்மை ஆகியவற்றுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சாலிகா முஸ்தபா வலியுறுத்தியுள்ளார். அவர்கள் மக்களுடன் நல்லிணக்கத்துடன் பழக வேண்டும் என்றும், அப்போதுதான் சிறந்த சேவையை வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

கவுண்டர் ஊழியர்கள் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், அவர்களின் அணுகுமுறை மிகவும் முக்கியம். அவர்கள் பொதுமக்களுக்கு அரசு அலுவலகத்தின் முதல் பிரதிநிதியாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்பது அவசியம்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் கவுண்டர் ஊழியர்களை படிப்படியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொது சேவை தலைமை இயக்குநர் Tan Sri Wan Ahmad Dahlan Abdul Aziz பரிந்துரைத்துள்ளார். இஃது அரசு சேவைகளின் செயல்பாட்டை பாதிக்காமல் இருக்க உதவும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

WATCH OUR LATEST NEWS