பேரா, கம்போங் தஞ்சோங் மேடானில் தீ: 12 மோட்டார் சைக்கிள்கள் தீயில் அழிந்தன

பாரிட், ஜன.27-

பேரா, Parit, Layang- Layang Kiri, Kampung Tanjung Medan-னில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 12 மோட்டார் சைக்கிள்கள் தீயில் அழிந்தன.

இத்தீவிபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து அதிகாலை 3.39 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையினர், அவசர அழைப்பைப் பெற்றதாக பேரா மாநில உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள், 8 நிமிடங்களில் தீயை கட்டுப்படுத்தினர். கொழுந்து விட்ட எரிந்த தீ, வீடமைப்புப்பகுதிக்குள் பரவுவதற்கு முன்னதாக தீ, ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக Sabarodzi Nor Ahmad குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS