சிப்பாங், ஜன.27-
தனது மனைவியை பேரங்காடி மையத்தில் சரமாரியாக அடித்த ஆடவரை போலீஸ் தேடி வருகிறது. அண்மையில் சிப்பாங்கில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொலி, சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து அந்த ஆடவர் தேடப்பட்டு வருவதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நொர்ஹிசாம் பஹாமான் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் 35 வயது தனது சகோதரி கடுமையாக தாக்கப்பட்டதாக அந்த மாதுவின் தம்பி போலீசாரிடம் உறுதிபடுத்தியுள்ளார்.
50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் தற்போது தேடப்பட்டு வருவதாக ஏசிபி நொர்ஹிசாம் பஹாமான் குறிப்பிட்டார்.