கோலாலம்பூர், ஜன.27-
PKR கட்சியின் டிவிஷன் மற்றும் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் முதல் மே மாதத்திற்குள் நடத்தப்படும் என்று அதன் தலைமை செயல்முறை அதிகாரி புசியா சாலே தெரிவித்தார்.
டிவிஷன் அளவிலான இளைஞர், மகளிர் பிரிவுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடத்தப்படும். இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 14 முதல் 16 ஆம் தேதி வரை நடத்தப்படும்.
மத்திய செயலைவைப் உறுப்பினர்கள் மற்றும் தேசிய அளவிலான இளைஞர், மகளிர் பிரிவுத் தேர்தல் மே 24 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் மே 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று புசியா சாலே தெரிவித்தார்.