கோலாலம்பூர், ஜன.27-
சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுவதும் கூட்டரசு நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகமோட்டிகள், தங்கள் வாகன வேக அளவை மணிக்கு 90 கிலோ மீட்டரிலிருந்து 80 ஆக குறைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனப்புத்தாண்டையொட்டி வாகமோட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஒரு தற்காலிக நடவடிக்கையாக வாகன வேக அளவு குறைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அலேக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
நாளை ஜனவரி 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி பிப்ரவரி 2 ஆம் தேதி வரை வாகனங்களுக்கான இந்த வேக அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அமைச்சர் விளக்கினார்.