தைப்பிங், ஜன.27-
தைப்பிங் சிறைச்சாலையில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கைதி ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பில் 82 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சுல்கப்ளி சரியாட் தெரிவித்தார்.
விசாரணை செய்யப்பட்டவர்களில் இருவர் சிறைத் சாலை வார்டன்கள் ஆவர். எஞ்சிய 80 பேர், சிறைக் கைதிகளாவர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விசாரணையில் மேலும் பல கைதிகள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை செய்யப்படும் என்று அவர் விளக்கினார்.
இதனிடைய சம்பந்தப்பட்ட கைதி மரணம் தொடர்பில் நீதி கோரி டாக்டர் பி. இராமசாமி தலைமையில் அமைதி மறியல் நடத்தப்பட்டுள்ளது.