சீனப் புத்தாண்டையொட்டி விலை உச்ச வரம்பு

சிரம்பான்,ஜன.27-

சீனப்புத்தாண்டை முன்னிட்டு நெகிரி செம்பிலான் மாநில அளவில் 15 வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நெகிரி செம்பிலான் மாநில தொழில்முனைவர், பருவநிலைமாற்றம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகாரப்பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம், சிரம்பான், Best Fresh Mart, Centerpointட்டில் இதனை அறிவித்தார்.

சீனப்புத்தாண்டையொட்டிய இந்த விலை உச்ச வரம்பு, ஜனவரி 25 ஆம் தேதி முதல் பிப்ரபவரி 2 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று வீரப்பன் குறிப்பிட்டார்.

சீனப்புத்தாண்டுக்கு முன்னதாக 4 நாட்களும், சீனப்புத்தாண்டு அன்று ஒரு நாளும், சீனப்புத்தாண்டுக்கு பிறகு 4 நாட்களும் என 9 நாட்களுக்கு விலை உச்ச வரம்பு நடைமுறையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளை வௌவால் மீன், இறால், பூண்டு, இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம், சிறிய வகை கடுகுக்கீரை, சிவப்பு மிளகாய், முட்டை கோஸ், முள்ளங்கி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக் கிழங்கு ஆகியவை ஒன்பது வகையான பொருட்களில் அடங்கும் என்று வீரப்பன் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS