Petronas-Pertamina நிறுவனங்களுக்கு இடையில் கூட்டு ஒத்துழைப்பு தொடரும்

கோலாலம்பூர், ஜன.27-

மலேசியாவும் இந்தோனேசியாவும் தத்தம் எரிவாயு நிறுவனங்கள் வாயிலாக ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ள உறுதிப்பூண்டுள்ளன.

மலேசியாவின் தேசிய பெட்ரோலிய நிறுவனமான Petronas மற்றும் இந்தோனேசியாவின் தேசிய எரிபொருள் உற்பத்தி நிறுவனமான Pertamina ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பு, தொடரப்படுவதற்கு இரு நாடுகளும் முழு கடப்பாட்டை கொண்டு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிராந்தியத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு உற்பத்தியில் பெரும் சக்திகளாக விளங்கி வரும் Petronas-சும், Pertamina-வும் புதிய வர்த்தகத்துறையில் ஊடுருவுவதற்கு உறுதி பூண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவிற்கு தமது அதிகாரத்துவ முதலாவது வருகையை மேற்கொண்டுள்ள இந்தோனேசிய அதிபர் Prabowo Subianto-வும், பிரதமர் டத்தோஸ்ரீ அ ன்வாரும் இன்று கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தில் சந்திப்பு நடத்தினர்.

அதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் மேற்கண்ட விவரத்தை தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS