மலேசியா, ஜன.28-
நாளை ஜனவரி 29 ஆம் தேதி புதன்கிழமை சீனப்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனப்புத்தாண்டையொட்டி ஜோகூர் பாரு மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் / பேரங்காடி மையங்களிலும் / ஒரு வாரத்திற்கு முன்பே வண்ணமயமான ஒளி அலங்காரங்களுடன் சீனப்புத்தாண்டு களைகட்டத் தொடங்கியது.
சிங்கப்பூர் டாலருடன் ஒப்பிடும் போது, மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சிறியதாக இருக்கும் சூழ்நிலையில் ஜோகூர்பாருவில் ஷாப்பிங் செய்வதற்கும், தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் சிங்கப்பூரியர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
சீனப்புத்தாண்டின் போது சிங்கப்பூரியர்கள் பலர், மலேசியாவில் வசிக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சென்று பார்ப்பது, தற்போது ஒரு பாரம்பரியமாகி விட்டது.
ஜோகூர்பாருவிற்கு அடுத்து மலாக்கா, பினாங்கு, கோலாலம்பூர் போன்ற பிற மாநிலங்களுக்கு சிங்கப்பூரியர்கள் செல்வது வழக்கமாகும்.
இதன் காரணமேகவே ஜோகூர் பாலம் மற்றும் இரண்டாவது இணைப்புப் பாலம் ஆகிய முதன்மை தரைவழிப்பாதைகள் வழியாக சிங்கப்பூரியர்களின் வருகை உச்சக்கட்ட நேரங்களில் பெரும் நெரிசலை ஏற்படுத்தி வருகிறது.
மக்களின் கூட்டம் மற்றும் நெரிசல் ஜனவரி 24 ஆம் தேதி தேதி தொடங்கி பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நீடிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனை சாவடி ஆணையமான ICA அறிவித்துள்ளது.
பள்ளி விடுமுறையாக இருப்பதால் 24 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் Woodlands மற்றும் Tuas சோதனைச் சாவடிகளை பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.