குளுவாங், ஜன.28-
ஜோகூர், குளுவாங், மாகோத்தா இராணுவ முகாமைச் சேர்ந்த வீரர் ஒருவர் செலுத்திய கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, டிரெய்லர் லோரியுடன் மோதி, விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவ்விபத்து நேற்று மாலை 4.25 மணியளவில் குளுவாங், ஜாலான் பத்து பஹாட்-மெர்சிங் சாலையின் 72 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
39 வயது முகமட் ஷாருடின் ஏ. ரஹிம் என்ற அந்த வீரர், குளுவாங்கிலிருந்து கஹாங்கை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹரின் முகமட் நோர் தெரிவித்தார்.