சபா பெர்னம், ஜன.28-
சுமார் ஒரு கோடியே 80 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள Ermin 5 மற்றும் Ekstasi போதைமாத்திரைகளை கடத்தியதாக ஒன்பது ஆடவர்கள், சபா பெர்னம், சுங்கை பெசார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அந்த ஒன்பது ஆடவர்களில் ஒருவர் உள்ளூரைச் சேர்ந்தவர், மற்றவர்கள் தைவான் பிரஜைகள் ஆவர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
29 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த ஒன்பது பேரும், கடந்த ஜனவரி 16 ஆம் தேதி பண்டார் புஞ்சாக் ஆலாம், தாமான் இண்டஸ்திரி அலாம் ஜெயா இரண்டில் 2 இல் 183.7 கிலோ எடை கொண்ட போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் அபாயகர போதைப் பொருள் சட்டம் 39B பிரிவின் கீழ் ஒன்பது பேரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.