குவாந்தான், ஜன.28-
மற்றவருக்கு சொந்தமான பிறப்புச்சான்றிதழை கொண்டு இருந்தது மற்றும் போலி அடையாள கார்டை பயன்படுத்தியது ஆகிய குற்றங்களுக்கான ஓர் இந்தோனேசிய மாதுவுக்கு குவாந்தான், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
குவந்தானில் கடை ஒன்றை நடத்தி வந்த 36 வயது இண்டா அர்யானி என்ற அந்த இந்தோனேசிய மாது, மாஜிஸ்திரேட் தெங்கு எலியானா துவான் கமருல்சமான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
போலி பிறப்புப்பத்திரத்தை பயன்படுத்தி குவந்தான், தேசிய பதிவு இலாகா அலுவலகத்தில் மைகாட் அட்டைக்கு அந்த இந்தோனேசிய மாது விண்ணப்பம் செய்ததைத் தொடர்ந்து அவர் சமர்ப்பித்துள்ள பத்திரங்கள் போலியானவை என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குவந்தான், கம்போங் கெம்பாடாங்கில் தேசிய பதிவு இலாகா மேற்கொண்ட சோதனையில் அந்த மாது வளைத்துப் பிடிக்கப்பட்டார்.