மதுபான விற்பனைத் தடை மீதான ஆய்வைத் தொடர தடை ஏதுமில்லை

ஈப்போ, ஜன.28-

பேரா மாநிலத்தில் மஞ்சோய் போன்ற முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதைப் போன்று முஸ்லிம்கள் அதிகமான வசிக்கின்ற இதர பகுதிகளில் அது போன்ற தடை விதிப்பது மீதான ஆய்வை தொடர்வதற்கு ஈப்போ மாநகர் மன்றத்திற்கு தடை ஏதுமில்லை என்று மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சாரானி முகமட் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தேசப் பரிந்துரை குறித்து ஈப்போ மாநகர் மன்றத்திடமிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆய்வில் இருந்து வரும் இந்த உத்தேசப் பரிந்துரையை மாநில ஊராட்சி மன்றத்திடம் தெரிவிப்பதற்கு முன்னதாக விதிமுறைகள் மீதான நடவடிக்கைக்குழு இதனை விரிவாக ஆராயும் என்று சாரானி முகமட் குறிப்பிட்டார்.

மதுபான தடை மீதான இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகள் உட்பட சில தரப்பினர் ஒரு விவாதப்பொருளாக மாற்றி வருவது குறித்து பேரா அரசாங்கம் கவலைக்கொள்வதாக சாரானி முகமட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS