பெட்டாலிங் ஜெயா, ஜன.28-
மூன்று மாதங்களுக்கு முன்பு லைசென்ஸின்றி சொந்த வர்த்தக நிறுவனத்தை நடத்திய குற்றத்திற்காக ஒரு தம்பதியருக்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
நிறுவனத்தின் பிரதான பங்குதாரர்களான 47 வயது வி. அன்பரசன், அவரின் 45 வயது மனைவி கே. ஷோபாதேவி ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆவர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பெட்டாலிங் ஜெயா, பெர்சியாரான் கின்ராரா செக்ஷென் மூன்றில் JMB-யில் இக்குற்றத்ததைப் புரிந்ததாக அத்தம்பதிருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தங்களுக்கு எதிரான குற்றத்தை அன்பரசனும், அவரின் மனைவி ஷோதேவியும் ஒப்புக்கொண்டனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆயிரம் ரிங்கிட் அபரதாதம் அல்லது மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1971 ஆம் ஆண்டு தனியார் ஏஜென்சி சட்டத்தின் கீழ் அந்த தம்பதியர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.