இந்தியாவில் சமய விழாவொன்றில் மரக்கட்டையிலான மேடை சரிந்து விழுந்ததில் ஐவர் மரணம்

லக்னோ, ஜன.28-

இந்தியாவின் வட பகுதியில் பாக்பாட் எனுமிடத்தில் சமய விழாவொன்றின் போது மரக்கடையிலான மேடை சரிந்து விழுந்ததில் குறைந்தது ஐவர் மரணமடைந்தனர். மேலும் 40 பேர் காயத்திற்கு இலக்காகினர்.  

சமயப் பூஜைக்காக இனிப்புப் பண்டம் தயாரிக்க கோவில் ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது. அதில் ஐவர் மாண்ட வேளை, 40 பேர் காயமுற்றனர். அவர்களில் இருபது பேர் சிகிச்சையளித்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். 

மரக்கட்டையிலான மேடை ஒவ்வோர் ஆண்டும் அச்சமய விழாவின் போது தயாரிக்கப்படும். சம்பவத்தின் போது நூற்றுக்கணக்கானோர் அந்த மேடையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.  

WATCH OUR LATEST NEWS