கிள்ளான், ஜன.28-
வட்டி முதலையின் கடனை அடைப்பதற்கு பிரேத வண்டியை திருடிச் சென்ற இரண்டு சகோதரர்களுக்கு கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 6 மாத சிறைத் தண்டனை விதித்தது.
இ- வர்த்தக கிடங்கின் தொழிலாளர்களான 27 வயது அப்துல் ஹமிட் ரிசான், அவரின் சகோதரர் 23 வயது பைசால் ரிசான் ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி அதிகாலை 1.05 மணியளவில் ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள ஒரு சூராவ் வளாகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கிள்ளான், கம்போங் தெலுக் கோங்கில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு சொந்தமான 30ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள Toyota Hiace ரக பிரேத வண்டி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விரு சகோதர்களும் ஜோகூரில் பிடிபட்டனர்.