போலீஸ்காரரைத் தாக்கிய ஆடவருக்கு 6 மாத சிறைத் தண்டனை

சுக்காய், ஜன.28-

போலீஸ்காரர் ஒருவரின் முகத்தில் குத்தியதற்காக ஆடவர் ஒருவருக்கு திரெங்கானு, சுக்காய் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது.

ஒரு வேலையற்ற நபரான 37 வயது ரோசிடி முகமட் என்ற அந்த நபர், கடந்த ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 12.45 மணியளவில் கெமாமான், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 353 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS