லஞ்சம் பெற்றதாக இரு போலீஸ்காரர்கள் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, ஜன.28-

லஞ்சம் பெற்றதாக இரண்டு போலீஸ் அதிகாரிகள், ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

உதவி சுப்ரிதெண்டன் அந்தஸ்தை கொண்ட 41 வயது முகமட் கைருல் சபேரி ஞான் என்ற அந்த போலீஸ் அதிகாரி, கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆடவர் ஒருவரிடம் 75 ஆயிரம் ரிங்கிட்டை கையூட்டாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

அந்த அதிகாரி , ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் வர்த்தக குற்றப்பிரிவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிபதி டத்தோ அஹமட் கமால் அரிபின் இஸ்மாயில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

சார்ஜன் அந்தஸ்தைக்கெண்ட மற்றொரு போலீஸ் அதிகாரி, லஞ்சம் பெற்றதாக இதே நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

50 வயது மைக்கல் அனாக் உமாப் என்ற அந்த போலீஸ் அதிகாரி கடந்த ஆண்டு குளுவாங்கில் உள்ள ஒரு வங்கியில் பெண் ஒருவரின் வங்கி கணக்கு வாயிலாக 5 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS