பெட்டாலிங் ஜெயா, ஜன.28-
வரும் ஏப்ரல் மாதம் கடும் வெப்பமயமாகலாம் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான MetMalaysia அறிவித்துள்ளது.
தீபகற்ப மலேசியாவில் வட மாநிலங்கள், கிழக்குக் கரையோர மாநிலங்களான கிளந்தான், பகாங் மற்றும் சரவாவில் வெப்ப நிலையின் தாக்கம் கடுமையாக இருக்கக்கூடும் என்று அது எச்சரித்துள்ளது.
பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் வெப்ப, வறண்ட சூழலுக்குரிய வானிலை எதிர்பார்க்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.