பிறை, ஜன.28-
பினாங்கு, பிறை கடற்பகுதியில் இரண்டு இந்தோனேசியர்கள் உட்பட நான்கு மீனவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இரு படகுகளிலிருந்து 6 துப்பாக்கிகள், 801 துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமட் தெரிவித்தார்.
உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் பிறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்த இரண்டு Fiber மீன் பிடிபடகுகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அவ்விரு படகுகளையும் போலீசார் சோதனையிட்ட போது , ஐந்து துப்பாக்கிகளும், M4 ரகத்திலான ஒரு துப்பாக்கியும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஹம்ஸா அகமட் குறிப்பிட்டார்.
இவ்விரு மீன் பிடிபடகுகளுக்கும் பதிவு எண்கள் இல்லை. அவை பினாங்கு துறைமுகத்திலிருந்து பினாங்கு பாலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது தடுத்து நிறுத்தப்பட்டதாக ஹம்ஸா அகமட் தெரிவித்தார்.